Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்தியாவுக்காக ஆடும்போது அவர் முக்கிய வீரராக இருப்பார் ‘ ….! தமிழக வீரருக்கு விராட் கோலி புகழாரம் ….!!!

பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது .

14-வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் பெங்களூர் அணி படுதோல்வி அடைந்தது .இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி கூறும்போது, “கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தியின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது.

நான் வருணை பற்றி சக வீரர்களிடம் பெருமையாக பேசிகொண்டிருந்தேன். இந்திய அணிக்காக விளையாடும் போது மிக அவர் முக்கியமான வீரராக இருப்பார்.அவரைப் போன்று இளம் வீரர்கள் பலரும் தங்களது திறமையை வெளிக்காட்ட வேண்டும் .அப்போது தான் இந்திய அணி வலுவாக இருக்கும் “இவ்வாறு விராட் கோலி அவரை பாராட்டி பேசினார் .

Categories

Tech |