நடிகர் சூர்யா அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. தற்போது இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தை தள்ளிவைத்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இயக்குனர் சிவா சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இதையடுத்து சிவா, சூர்யா இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .