Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் பரவல்…. கட்டுப்படுத்த தீவிர முயற்சி…. பிரபல நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு….!!

கொரோனா பரவல் தொடர்பாக ஆக்லாந்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஊரடங்கு மற்றும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆகியவற்றின் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகின்றது. அதாவது நியூசிலாந்தில் ஆக்லாந்து என்னும் பெரிய நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகின்றது. இதன் காரணமாக அங்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தளர்வுகள் இல்லாத கடுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்நிலையில் ஆக்லாந்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அந்நாட்டு அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதாவது பொது மக்களுக்கு பார்சலில் சாப்பாடு வழங்க உணவகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நகரின் சில முக்கிய அலுவலகங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளிகள் திறக்கப்படாது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |