ரியோ நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் ரியோ. இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் . தற்போது இவர் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் பால சரவணன், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் கலக்கலான ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் இந்த படம் வருகிற செப்டம்பர் 24-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.