Categories
மாநில செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் நலனை கருதி அனைத்து விவகாரங்களிலும் முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுத்து வருவதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு என்பதே ஒரே குறிக்கோள். மாணவர்கள் அனைவரும் தங்களின் பிறந்தநாளில் மரக்கன்று நடும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அரசு பள்ளியில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயிற்சி தரப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியும். பள்ளி மாணவர்களின் நலனுக்காகவே அரசு எப்போதும் செயல்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |