Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… பெண்களை வைத்து நடக்கும் தொழில்… போலீஸ் நடவடிக்கை…!!

பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அடுத்துள்ள நெட்டையம்பாளையம் பகுதியில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக பரமத்திவேலூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜாரணவீரன் உத்தரவின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது நெட்டையம்பாளையம் பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்தில் உள்ள வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் விபச்சார தொழில் செய்தது சிறுகிணத்துபாளையத்தில் வசிக்கும் ராமசாமி, பாண்டமங்கலத்தை சேர்ந்த முரளி என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அங்கிருந்த பெண்களை அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கைது செய்த இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |