ரயில் போக்குவரத்தும் ரயில் சேவையும் அவ்வப்போது பல்வேறு பராமரிப்புக்களை காரணமாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி தினமும் மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை 7 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவையானது, நாளையும் (செப்.22), 29ஆம் தேதியும் விழுப்புரத்தில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மாலை 3.45 மணிக்கு தினமும் சென்னை எழும்பூரிலிருந்து காரைக்குடிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவையானது நாளையும் (செப்.22), 29-ம் தேதியும் எழும்பூர் விழுப்புரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயிலானது எழும்பூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக மாலை 6.10 .க்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும். இந்நிலையில் காலை 9:10 மணிக்கு புதுச்சேரியில் இருந்து எழும்பூர் வழியாக புதுடெல்லிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் பயணப் பாதையும் மாற்றப்பட்டு, நாளையிலும் மற்றும் 29ம் தேதியிலும் பாதை மாற்றப்பட்டு விழுப்புரம், காட்பாடி, பரம்பூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயிலானது பெரம்பூருக்கு மாலை 3:25 மணிக்கு வந்தடையும். மேலே குறிப்பிட்ட நாளில் இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு முன் பதிவு செய்தவர்கள் எழும்பூரிலிருந்து பயணிப்பதற்கு பதிலாக பெரம்பூரிலிருந்து பயணிக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.