பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 185 ரன்கள் குவித்துள்ளது .
14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் இன்று நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. இதன் தொடக்க வீரர்களாக எவின் லூயிஸ்- ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இதில் அதிரடியாக விளையாடிய எவின் லூயிஸ் 7 பவுண்டரி ,ஒரு சிக்சர் அடுத்து விளாசி 36 ரன்னில் ஆட்டமிழந்தார்.இதன்பிறகு களம் இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்னில் வெளியேறினார்.
அடுத்ததாக ஜெய்ஸ்வால் 49 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பின் களமிறங்கிய மஹிபால் லோம்ரோர் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார் .இதனால் அணியின் ஸ்கோர் மீண்டும் உயர்ந்தது. இதனால் ராஜஸ்தான் அணி 200 ரன்கள் தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 19-வது ஓவரில் முகமது ஷமி பந்து வீச்சில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார் .இதையடுத்து கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதனால் இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும் ,முகமது ஷமி 3 விக்கெட்டும் கைப்பற்றி அசத்தினர். இதன்பின் களமிறங்கி உள்ள பஞ்சாப் அணி 386 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.