தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஜவுளி கடைகள் மட்டுமின்றி எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பல்வேறு கடைகளும் சிறப்புத் தள்ளுபடியை அறிவித்து வருகிறது.
அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறிப்பிட்ட சிலரால் ஜவுளி கடைகளுக்கு மட்டும் 30 சதவீதம்சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யபடுவதாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் பிற ஜவுளி ரகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும் அறிவித்துள்ளது. தீபாவளி சிறப்பு விற்பனை இலக்காக ரூபாய் 200 கோடிக்கு நிர்ணயம் செய்து உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நவம்பர் 30-ஆம் தேதி வரை மட்டுமே 30% சிறப்பு தள்ளுபடி விலையில் ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.