நான் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகரசபை 30-வது வார்டு பாரதி நகர், 4வது தெரு மற்றும் ஓடை தெருவில் சாலை போடுவதற்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ரோடு தோண்டப்பட்டது. இவ்வாறு சாலை போடுவதற்காக தோன்றி போடப்பட்டு பணிகள் நடைபெறாமல் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குண்டும் குழியுமான சாலையில் செல்லும்போது கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனை கண்டித்தும், வாறுகால்களை புதுப்பித்து சாலை போடும் பணியை உடனடியாக தொடங்க நகர சபை நிர்வாகத்தை வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியினர் ரோட்டில் வாழை மரக்கன்றுகளை நட்டு போராட்டம் மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி பாரதிநகர் கிளை பொறுப்பாளர் முகிலன் தலைமை தாங்கினார். மேலும் இதில் தொகுதி செயலாளர் மருதம், மாரியப்பன், பொறுப்பாளர்கள் பெருமாள்சாமி, கருப்பசாமி, செய்தித்தொடர்பாளர் பிரான்சிஸ், நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.