Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் வானிலை

விடாமல் வெளுத்த கனமழை…. ராமநாதபுரத்துக்கு முதலிடம் ….!!

நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் , கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளாக விடுமுறை விடுவதையும் தொடர்ந்து பார்த்து வருகின்றோம்.

Image result for கனமழை

இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பொன்னேரி, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், மாதவரம், அண்ணாநகர், கோயம்பேடு, புழல், பூண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி ஆகிய இடங்களில் மழை பெய்தது.

Related image

இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி , சேலம் , ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நேற்று பெய்த மழையில் அதிகபட்சமாக  ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. பாம்பனில் 18 சென்டிமீட்டர் மழையும் , மண்டபத்தில் 17 சென்டிமீட்டர் மழையும் , தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரத்தில் 16 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Categories

Tech |