கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பண்டஅள்ளி கிராமத்தில் முதியவர் மாரிமுத்து வசித்து வந்தார். இவர் தொம்பரகாம்பட்டி தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தர்மபுரியிலிருந்து சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் முதியவர் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் தூக்கி வீசப்பட்ட முதியவர் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிமுத்துவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.