Categories
தேசிய செய்திகள்

15 மாதங்களில்…. காங்கிரஸ் மத்திய பிரதேசத்தை சீரழித்துவிட்டது…. சிவராஜ் சிங்க் சவுகான்…!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது 230 தொகுதிகளில் 114 தொகுதிகளையும், பா.ஜ.க. 106 இடங்களையும் கைப்பற்றிய போது,  காங்கிரஸ் கட்சியானது 116 தொகுதிகள் தேவை என்ற நிலை ஏற்பட்டபோது சுயேட்சையாக தனது ஆட்சியை அமைத்தது.

இந்நிலையில் கமல்நாத் அவர்கள் உட்கட்சிப் பூசல் காரணமாக 15 மாநிலங்களில் தனது ஆட்சியை இழந்தார். அதனைத் தொடர்ந்து பா.ஜனதா கட்சியின்  சிவராஜ் சிங் அவர்கள் முதல் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் சிவராஜ் சிங் சவுகான் நேற்று  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “காங்கிரஸ் கட்சியானது 15 மாதங்களில் மத்திய பிரதேசத்தை சீரழித்து விட்டது.

மேலும் அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகளும் நிறுத்தப்பட்டதோடு,  நல திட்டப பணிகளும் பாதிக்கப்பட்டன. விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் பணத்தைக்கூட கமல்நாத் அவர்கள் நிறுத்தியுள்ளார். பிரதமர் பாசல் பிமா யோஜனா கணக்கில் கொரோனா காலத்தில்  8 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தினேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |