Categories
தேசிய செய்திகள்

“மனிதர்களையே மதிக்காத இந்த சமூகத்தில்” நாய்களுக்கு கோலாக திருமணம்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் நடன பள்ளியை சேர்ந்த ஆகாஷ் மற்றும் அர்ஜுன் என்பவர்கள் ஆசிடு என்ற நாயை வளர்த்து வந்துள்ளனர். தங்களது செல்லப்பிராணியான ஆசிட்டிர்க்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருமணம் செய்து வைக்க எண்ணி  துணையை தேடி அடைந்துள்ள நிலையில் ஜான்வி  என்ற நாயை புன்னையூர் குளம் என்ற பகுதியில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒருவரிடம் அவர்கள் விலை கொடுத்து வாங்கி உள்ளனர்.

அதன்பின்னர் மனிதர்களுக்கு நடக்கும் திருமணத்தை போல திருமணத்தை நடத்த எண்ணிய ஆகாஷ் மற்றும் அர்ஜுனின்  தாய், தந்தையரின் ஒப்புதலின்படி நாய்களுக்கு பட்டுப்புடவை, புத்தாடை அணிவித்து மாலை மாற்றியதோடு மட்டுமல்லாமல் திருமண கேக் வெட்டியும்  சிறப்பாக நடத்தியுள்ளனர். மேலும் இத்திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை விருந்தும் அளிக்கப்பட்டது.

மனிதர்களையே  மதிக்காதே இந்த சமூகத்தில், நாய்களுக்குதிருமணம் நடத்தியுள்ள இச்சம்பவம் காண்போர்  அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் ஆசிட் மற்றும் ஜான்வியின்  திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு எடுக்கப்பட்ட ப்ரீ வெட்டிங் வீடியோ மற்றும் சேவ் த டே  வீடியோக்கள் வைரல் ஆக பரவியது குறிப்பிடதக்கது.

Categories

Tech |