Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“உயரம் குறைவாக இருக்கு” அபாயகரமான தடுப்பு சுவர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சாலை பகுதியில் உயரம் குறைந்த கிணற்றால் அபாயம் ஏற்படுமோ என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  மொரட்டுபாளையம் ஊராட்சி பேருந்து நிறுத்த பகுதியிலிருந்து வாலிபாளையம் வழியாக செல்லும் பிரதான சாலையில் கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்த கிணற்றின் தடுப்பு சுவர் ஒரு அடிக்கும் குறைவாக இருக்கின்றது. இந்நிலையில் சாலையின் வளைவு பகுதியில் அமைந்துள்ள இந்த கிணற்றின் தடுப்பு சுவரை உயர்த்த வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில், போக்குவரத்து அதிகமாக இருக்கும் இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர், நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழும் அபாயம் உள்ளது.

மேலும் இந்தக் கிணற்றுக்கு அருகில்குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளதால் விளையாடும் சிறுவர்கள் தவறி கிணற்றுக்குள் விழும் வாய்ப்பும் இருகின்றது. எனவே சம்பந்தப்பட்ட துறை  அதிகாரிகள் உயிர் சேதம் ஏற்படும் முன்னர் தடுப்பு சுவரின் உயரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |