Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடைந்து போன கால்வாய்…. சாலையில் உருண்டு புரண்டு குளித்த…. முன்னாள் கவுன்சிலரின் கோரிக்கை…!!!…

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அணையில் இருந்து விவசாய நிலங்களுக்கு பல கால்வாய்கள் மூலம் தண்ணீரானது திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில் முளகுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு கூட்டமாவு கிராமம் வழியாக திருவிதாங்கோடு செல்லும் கால்வாய் மற்றும் கடைமடைகளில் முறையாக குடிமராத்து பணிகள் நடைபெறாததால் கால்வாயில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தண்ணீரானது முறையாக செல்லமுடியாததால் கூட்டமாவு கிராம சாலையில் மற்றுமொரு கால்வாயாக உருவாகி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து கடந்த ஒரு வாரமாக வழிந்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் சிரமத்துக்கு உள்ளானதால், இடையூறாக இருப்பதாகவும் கால்வாயை சீர் செய்யவும் பொதுப்பணித் துறையினருக்கும், முளகுமூடு பேரூராட்சி அலுவலருக்கும் பொதுமக்கள் சார்பாக மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இப்புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் முளகுமூடு பேரூராட்சி 15-ஆவது வார்டு முன்னாள் கவுன்சிலர் தங்கப்பன் என்பவர் சாலையில் ஓடும் தண்ணீரில் உருண்டு புரண்டு நீச்சலடித்து குளிக்கத் தொடங்கியதோடு மட்டுமல்லாமல் இதற்கு யார் நடவடிக்கை எடுப்பார்கள்? யார் எடுத்தார்கள்? என்ற கேள்வியையும் முன்வைத்தார். சாலையில் குளித்ததை  அவர் இளைஞர்கள் சிலர் உதவியுடன் வீடியோவாக எடுத்து அதை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

முளகுமேடு பகுதியில் ஏராளமான அரசியல் பிரமுகர் மற்றும் இளைஞர்கள் இருந்தும் இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இவர் செய்த செயல் அரசியல் அலுவலரின்  கவனத்திற்கு கொண்டு சென்றது மிகவும் பாராட்டு தகுந்ததாகும். மேலும் இவரது கோரிக்கையை அரசாங்கம் கருத்தில் எடுத்து செயல்பட வேண்டும் என்ற எதிரிபார்ப்பு அனைவரிடமும் உள்ளது.

 

Categories

Tech |