Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“ரொம்ப கம்மியா கொடுக்குறாங்க” தொழிலாளர்களின் திடீர் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

உரிய சம்பளம் வழங்கப்படாததால் கூலிதொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆழாங்கால் மழவராயனூர் வாய்கால்களை தூர்வாரும் பணியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்தை குறைத்து வழங்குகின்றனர். இந்நிலையில் கோபமடைந்த கூலி தொழிலாளர்கள் பணியினை புறக்கணித்து ஆழாங்கால் மெயின் ரோட்டில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது சம்பளத்தை குறைக்காமல் முழுமையாக வழங்க வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 270 ரூபாய்க்கு பதிலாக 120 ரூபாய் தான் வழங்குகின்றனர் என அவர்கள் முறையிட்டுள்ளனர்.

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இவ்வாறு தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |