அரிய வகையிலான 63 பெண் குயின்களை விஷத் தேனீக்கள் கொட்டிக் கொன்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்ஆப்பிரிக்கா நாட்டின் கேப் டவுன் என்னும் நகரில் ஆச்சரியமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்நகரின் கடலோர பகுதியில் பறவைகள் காப்பகம் ஒன்று உள்ளது. இந்த காப்பகத்தில் அரிய வகையிலான பென்குயின்கள் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.
இந்த நிலையில் அந்த காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த பென்குயின்களை விஷத் தேனீக்கள் கொட்டியுள்ளன. இதனால் 63 பென்குயின்கள் இறந்துள்ளன. இது குறித்து கால்நடை மருத்துவரான டேவிட் ராபர்ட்ஸ் கூறியதாவது “பென்குயின்களின் கண்களை சுற்றிலும் தேனீக்கள் கொட்டிய அடையாளம் உள்ளது.
அதோடு பென்குயின்கள் உயிரிழந்த இடத்தில் பல விஷத்தேனீக்களும் இறந்து கிடந்துள்ளது. மேலும் பென்குயின்களை பிரேதப் பரிசோதனை செய்தபோது அதன் உடல் முழுவதும் விஷத் தேனீக்கள் கொட்டியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மிக அரிதானதாகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதுமாக உள்ளது.