வேலூரில் காட்பாடி வட்டம் ஏரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சாது முத்துகிருஷ்ணன். கூலித் தொழிலாளியான இவர் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு முறை அரக்கோணம் தொகுதியில் போட்டிட்டு தனது டெபாசிடை இழந்தார். ஏரந்தாங்கல் ஊராட்சி தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.
தற்பொழுது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவர் அதே ஊரில் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் இவரது மகளான செந்தமிழ்செல்வியும் அப்பாவிற்கு போட்டியாக மனு தாக்கல் செய்துள்ளார். செந்தமிழ்செல்வி பட்டதாரி பெண் ஆவார். இது குறித்து பேசிய அவர், “சமூக சேவைகளில் எனக்கு மிகவும் ஆர்வம் அதிகமாக உண்டு. அதனால் நான் வெற்றி பெற்றால் எங்களது ஊரை முன்னேற்ற பாதையிலும் செலுத்தவும், ஊரின் தேவைகளை அறிந்து பணியாற்றுவேன்” என்று தெரிவித்துள்ளார்.