4 மாதம் சம்பளம் கொடுக்காததை கண்டித்து கவுரவ விரிவுரையாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாட்டில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த மகளிர் கல்லூரி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக அரசால் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் நியமனம் செய்யப்பட்டு தற்போது இந்த கல்லூரியில் வேலை பார்த்து வரும் கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட 128 நபர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்று தெரிகிறது.
ஆகவே இதை கண்டித்து நிலுவையிலுள்ள சம்பளத்தை விரைவில் வழங்ககோரி கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் 2-வது நாளாக அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.