சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் அவ்வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ளசூசையா பூரத்தில் அதிகமான குடியிருப்புகள் இருக்கின்றன. அங்கு ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மக்கள் தங்கள் வீட்டில் சேமிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு ஒரு சில இடங்களில் மட்டுமே குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் மக்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதனால், அப்பகுதியில் குப்பை தொட்டிகள் சீக்கிரமாக நிரம்பி விடுகின்றன. இதனால் அப்பகுதியில் இருக்கும் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
இந்த குப்பைகள் காற்று வீசும் போது குப்பைகள் அங்கும் இங்கும் பறப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமபடுகின்றனர். சில நேரங்களில் சாலையில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளை நாய்கள் இழுத்து செல்வதால் சுகாதார சீர்கேடும், விபத்தும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் குப்பைகளை அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.