Categories
மாநில செய்திகள்

திடுக்கிடும் தகவல்…. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்… எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன மோசடி?

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தகுதியின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். ஏற்கனவே தேர்தலின் போதும் கூட திமுகவும் இந்த விஷயத்தை முன் வைத்துதான் பரப்புரை செய்தார்கள்.. இந்த நகை கடன்  தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி பல வங்கிகளில் இலட்சக்கணக்கில் ஒருவர் கடன் பெற்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஒரே ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஒரே நபர் பல சங்கங்களில் லட்சக்கணக்கில் பல நகைகளை கடன்களை பெற்றுள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒருவர் பல கூட்டுறவு சங்கங்களில் பல நகை கடன்கள் மூலம் பல லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

எந்தெந்த மாவட்டங்களில் எப்படியெல்லாம் மோசடி : 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இருக்கும் குரும்பூரில் நகைக் கடனுக்காக பெறப்பட்ட 500 பொட்டலங்களில் 261 ஒரு பொட்டலங்கள் ஆய்வின்போது இருப்பில் இல்லை. குரும்பூரில் நகைகள் இருப்பில் இல்லாத பொட்டலங்களின் நகை கடன் மதிப்பு ரூபாய் 1.98 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

நாமக்கல் மல்லசமுத்திரம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகக் குழு இயக்குனர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரூபாய் 11.33 லட்சம் கடனை பெற அவர் அளித்த அடமான நகைகள் கவரிங் நகைகள் என ஆய்வில் கண்டறியப்பட்டது.

கன்னியாகுமரி குமரக்குடி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஒரே ஆதார் எண் அடிப்படையில் பல நபர்கள் கடன் வாங்கி மோசடி செய்துள்ளனர். கன்னியாகுமரி கீழ்குளம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஒரே நபர் 625 நகை கடன்கள் மூலம் ரூபாய் 1.25 கோடி கடன் பெற்றுள்ளார்.

குளறுபடிகள் நடந்தது எப்படி? 

ஒரு கிராமுக்கு அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் தொகை கடனாக வழங்கப்பட்டுள்ளது.
நகைகளே இல்லாமல் ஏட்டளவில் நகை கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன.. போலி நகைள், தரம் குறைந்த நகைகளுக்கு நகை கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன. திருத்தங்கள் அல்லது இடைச்செருகல் மூலம் சில உறுப்பினர்கள் பெயர்களை சேர்த்து நகை கடன்கள் வழங்கப்பட்டன.

 

Categories

Tech |