Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போக்குவரத்து நெரிசல்…. அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்….!!

போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள பூக்கடை ரத்னா பஜார் ரோடு மற்றும் என்.எஸ்.சி போஸ் ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட சாலையோரம் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அங்கு ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டுள்ள கடைகளே காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல செயற்பொறியாளர் சொக்கலிங்கம் மற்றும் 59-வது வார்டு உதவி பொறியாளர் கார்த்திக் தலைமையில் மாநகராட்சியின் ஊழியர்கள் அப்பகுதியில் இருக்கும் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை  அகற்றியுள்ளனர்.

மேலும் நடைபாதைவாசிகளை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை அதிகாரி ஷோபனா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேசி அவர்களை சமாதானம் செய்துள்ளார். இதனையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் சாலையின் இருபுறங்களிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |