மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோடாங்கிபட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு ஆவுடையம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள வயலில் கழை எடுக்கும் வேலை செய்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கிய ஆவுடையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆவுடையம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.