Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காலம் தாழ்த்திய உரிமையாளர்…. தம்பதியினரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பணம் பிரச்சினை காரணமாக தம்பதிகள் தனது குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் குமார் – தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் குமார் கேரளாவில் 10 லட்சம் ரூபாய் பணத்திற்கு ஒத்தி வீடு பிடித்து அதே பகுதியில் ஜவுளித் தொழில் செய்து வந்துள்ளார். தற்போது சொந்த ஊரில் சென்று ஜவுளி தொழில் செய்வதாக வீட்டின் உரிமையாளரிடம் கூறி பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு வீட்டின் உரிமையாளர் பணத்தை கொடுக்காமல் நீண்ட நாட்களாக காலம் தாழ்த்தி உள்ளார்.

அதன் பிறகு சில நாட்களுக்கு முன்பு குமார் தனது சொந்த ஊருக்கு வந்துவிட்டார். கடந்த செப்டம்பர் 20 – ஆம் தேதியன்று தம்பதியினர் ஒத்தி பணம் கிடைக்காத மன உளைச்சலினால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். அதன் பிறகு தம்பதியினரும் விஷம் குடித்துவிட்டு தங்களின் குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளனர். இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |