சுவிட்சர்லாந்தில் உடலுறுப்பு தானம் முறையில் சீர்திருத்தம் கொண்டுவர போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் “உடலுறுப்பு தானம் உயிர்களை காப்பாற்றுதல்” என்னும் முயற்சியை 2019இல் தொடங்கினர். இதனால் உடலுறுப்பு தானம் செய்பவர் நன்கொடையாளராக கருதப்பட்டு அவர்கள் இறந்தப்பின் குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டு உறுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. இம்முயற்சி பெரிதும் பயனளிக்கவில்லை. எனவே உடலுறுப்புகான தேவை அதிகரிப்பதால் அந்நாட்டு பாராளுமன்றம் தேசியளவில் உடலுறுப்பு தான முறையினை திருத்தி அனுமான கொள்கை முறையை பின்பற்றும் சட்டத்தை மாற்றியமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதற்காக விரைவில் நாடு முழுதும் வாக்குகள் சேகரிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து சுவிஸ் டிரான்ஸ்ப்லான்ட் அமைப்பு கூறுகையில், உடலுறுப்புக்கான தேவை அதிகரிப்பதால் வாரத்திற்கு 2 பேர் உயிரிழக்கின்றனர். மேலும் ஆண்டுக்கு சுமார் 250 பேர் உடலுறுப்பு தானம் செய்ய முன் வந்தாலும் அது தேவைக்கு மிக குறைவாகவே உள்ளது என கூறியுள்ளது. குறிப்பாக இன்றைய நிலையில் 1500 க்கும் மேற்பட்டோர் உடலுறுப்புக்காக காத்துக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.