பிரபல மராத்தி நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே (25) மற்றும் அவரது காதலர் சுபம் தாட்கே இருவரும் கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவாவின் ஹட்பேட் கிராமத்தின் அருகே சென்றபோது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகே இருந்த சிற்றோடையில் விழுந்ததால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில், இந்த சம்பவம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories