Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களே…. உங்களுக்கு ஹேப்பி நியூஸ்… 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி உள்ளதாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மற்றும் ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்துவது வழக்கம். ஆனால் கடந்த 1  1/2 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தற்போது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கான ஒப்புதலை இந்த வார இறுதியில் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்முலமாக சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வார இறுதியில் இந்த அகவிலைப்படி உயர்வுக்கான ஒப்புதல் கையெழுத்து இடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சுமார் 50 லட்சம் மத்திய அரசு பென்சன் தாரர்கள் பயன்பெறுவர் எனவும் தெரிகிறது.

Categories

Tech |