அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகி பாபு, குக் வித் கோமாளி பிரபலம் புகழ், சுமித்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
Happy to announce that #Valimai will hit the screens on Pongal 2022.#ValimaiFromPongal#ValimaiPongal #Valimai#Ajithkumar #HVinoth @BayViewProjOffl @ZeeStudios_ @punitgoenka @SureshChandraa #NiravShah @thisisysr @humasqureshi @ActorKartikeya @RajAyyappamv @bani_j @iYogiBabu
— Boney Kapoor (@BoneyKapoor) September 22, 2021
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. இந்நிலையில் வலிமை படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 2022-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் தியேட்டர்களில் இந்த படம் ரிலீசாக உள்ளது. இந்த அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.