Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட விதைகள்…. பரிசோதனை அவசியம்…. விதை ஆய்வு துறையின் எச்சரிக்கை….!!

 முளைப்பு சக்தி குன்றிய விதைகளை விற்பனை செய்யக்கூடாது என விதை ஆய்வு துறை அதிகாரி எச்சரித்துள்ளார். 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விதை ஆய்வு துறை முளைக்கும் சக்தி குறைவாக இருக்கும் விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யத் தடை விதித்துள்ளது. இதுகுறித்து விதை ஆய்வு துறை அதிகாரி வெங்கடாசலம் கூறும்போது வியாபாரிகள் விதைகளை உரிய இடத்தில் கொடுத்து ஆய்வு செய்து முடிவுகளைப் பெற்றுக்கொண்டு அதன் நகலை விற்பவரிடத்தில் கொடுக்குமாறு தெரிவித்துள்ளார்.

அதோடு ஆய்வு முடிவுகள் பெறப்படவில்லை எனில் விற்பனையாளர்கள் பணிவிதை மாதிரிகளை எடுத்து பரிசோதனை நிலையத்திற்கு அனுப்ப வேண்டும். அதன்பின் வரும் ஆய்வு முடிவின் அடிப்படையில் விவசாயிகளுக்கு விற்பனைக்குக் கொடுக்கவேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து உண்மைநிலை விதைகளை வியாபாரம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், முளைப்புத்திறன் குறித்து ஆய்வு செய்த பின்னரே விதைகள் விற்பனைக்கு செல்ல வேண்டும் என்றும், இதனை மீறி முளைப்புத் திறன் குறைந்த விதைகளை விற்பனை செய்தால்  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |