மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை தலைமை செயலர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகமானது வரும் 25ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளனர். இந்த முகாம் மூலம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளிலுள்ள அனைத்து மழைநீர் வடிகால்களையும் 20% தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமைச் செயலாளரான வெ. இறையன்பு வெஸ்ட்காட் சாலை, எம்.ஆர்.சி நகர் பிரதான சாலை,காந்தி மண்டபம் சாலை , மற்றும் ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள மழைநீர் வடிகாலில் தூர்வாரும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
அப்போது கூடுதல் தலைமைச் செயலர், சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் குடிநீர் வழங்கல் துறையினர் போன்றோர் உடன் இருந்தனர். மேலும் பருவ மழை தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணியை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை செயலர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.