முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் தற்போது உள்ள இடைக்கால அரசை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட அமெரிக்க நாடான சூடானில் 1989 முதல் 2019 வரை அதிபராக இருந்தவர் ஒமர் அல்-பஷீர். இவரது ஆட்சியில் மக்கள் போராட்டம் நடத்தி மற்றும் ராணுவ கிளர்ச்சியின் பஷிர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை அடுத்து பொதுமக்கள் மற்றும் இராணுவம் இணைந்து இடைக்கால அரசை சூடானில் ஏற்படுத்தியுள்ளனர். அதற்கு அப்துல்லா ஹம்டோ என்பவர் பிரதமராக உள்ளார். இந்நிலையில் இடைக்கால ஆட்சியில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் கிளர்ச்சி செய்து வருகின்றனர்.
மேலும் அவர்கள் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவர்கள் சூடான் தலைநகரான ஷர்டோம் என்னும் பகுதியில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி சென்றுள்ளனர். ஆனால் இந்த முயற்சியை அந்நாட்டு இராணுவமே தடுத்து நிறுத்தி உள்ளது. மேலும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 40 திற்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். குறிப்பாக இவர்கள் முன்னாள் அதிபரான ஓமரின் ஆதரவாளர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.