Categories
உலக செய்திகள்

‘முககவசம் அணியக்கூடாது’…. அமெரிக்கா உணவகத்தில்…. முகநூலில் பதிவிட்ட தம்பதியினர்….!!

அமெரிக்காவில் முககவசம் அணிந்து சென்ற தம்பதியினரை உணவகத்தில் உள்ளே              நுழையவிடாமல் வெளியே அனுப்பியுள்ளனர்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுக்காக பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமானது முககவசம் அணிவது ஆகும். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் உணவகம் ஒன்றிற்கு உண்பதற்காக தம்பதியினர் முககவசம் அணிந்து சென்றுள்ளனர். அப்பொழுது உணவக நிர்வாகம் அவர்களை முககவசம் அணிந்திருந்தால் வெளியே போக சொல்லி கூறியுள்ளனர்.

மேலும் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு சரியாக விடையளிக்கவில்லை என்றும் அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தனியார் நடத்தும் உணவகங்கள் மற்றும் விடுதிகள் என்பதால் அவர்களுக்கு ஏற்றது போல் விதிகளை மாற்றிக் கொள்ளலாம் என்ற நடைமுறை உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த தம்பதியினர் முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “உணவகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் மாஸ் அணிந்து வருபவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை.

ஒருவேளை உள்ளே வரவேண்டுமெனில் முககவசத்தை கழட்டி விட்டு வாருங்கள் என்று கூறினார். மேலும் எங்களது 4 மாத குழந்தைக்கு உடல்நலக்குறைவு உள்ளதால் நாங்கள் முககவசம் அணிந்துள்ளோம் என்று கூறினோம் ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர். அதிலும் அந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முககவசம் அணிவது குறித்த எந்தவொரு வாசகம் எழுதிய பலகையையும் வைக்கவில்லை” என்று பதிவிட்டுள்ளனர்.

Categories

Tech |