Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதி… திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!!

கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.. ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு 3 நாட்களுக்கு முன் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பித்தும் தரிசனம் செய்யலாம்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 25 ஆம் தேதி முதல் ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட் பெறலாம் என்று தெரிவித்துள்ளது. கொரோனாவை  கட்டுப்படுத்தும் விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

Categories

Tech |