நிவராணப் பொருட்கள் ஏற்றி வந்த லாரியை தலீபான்கள் மறித்துள்ள வீடியோ காட்சிகளானது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் தலீபான்களின் கையில் சென்றது. மேலும் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தற்பொழுது புதிய இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். இதற்கிடையில் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தான் அந்நாட்டுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் செய்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஆப்கானுக்கு சென்றுள்ளது.
The truck was loaded with food on a Pakistani-aided vehicle with a Pakistani flag, and when it crossed the Torkham gate, the Taliban at the gate snatched the Pakistani flag from the vehicle. pic.twitter.com/fL8LGLPCcE
— Ihtesham Afghan (@IhteshamAfghan) September 21, 2021
அதிலும் டோர்காம் எல்லையைக் கடக்கும் பொழுது அங்கிருந்த தலீபான்கள் வாகனத்தை மறித்து அதிலிருந்த பாகிஸ்தான் கொடியை உடைத்து நீக்கியுள்ளனர். குறிப்பாக பாகிஸ்தான் ஆப்கானுக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில் தலீபான்கள் இது போன்று செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ காட்சியானது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.