மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நகர் 2-வது தெருவில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் லட்சுமி இரவு நேரத்தில் வீட்டின் முன்பாக வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது ஸ்கூட்டரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது லட்சுமி அதை இறுக்கமாக பிடித்துக்கொண்டு திருடன் என கூச்சலிட்டுள்ளார்.
அதன்பின் அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தியினர் வருவதை கண்ட மர்ம நபர்கள் சங்கிலியை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மூதாட்டியிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் மூதாட்டிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.