மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலகிருஷ்ணாபுரத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கண்டிகை பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் ராஜ்குமார் வயரிங் வேலை செய்து கொண்டிறிந்திருகிறார். அப்போது அருகிலிருந்த கேபிள் வயரை தனது கையால் தூக்கி வீசிய போது மின் கம்பத்தில் உள்ள வயர் மேல் பட்டு ராஜ்குமார் மீது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.