2 தொழிலாளிகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொட்டாம்புலி சந்து கிராமத்தில் பாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வெள்ளக்குளம் பகுதியில் வசிக்கும் சரிதா என்பவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் கட்டிட சித்தாள் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இவருக்கும் பாரதி என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த குடும்பத்தினர் இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த இரண்டு பேரும் தற்கொலை செய்ய முடிவு செய்த நிலையில் மலை அடிவாரப் பகுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கு இருக்கும் வேப்பமரத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.