தனியாருக்கு சொந்தமான சி.டி. ஸ்கேன் மையம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் சாலையில் பிரபலமான மருத்துவமனைக்கு சொந்தமான தனியார் சி.டி. ஸ்கேன் மையம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த மையத்தில் மின்சாதன பொருட்கள் வைத்திருந்த அறையில் திடீரென கரும்புகை வெளியேறிய சிறிது நேரத்தில் அங்கே மளமளவென தீ பற்றி ஏறிய ஆரம்பித்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து தெரியாததால் தீயணைப்பு துறையினரும் மற்றும் காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.