Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாசலில் நிறுத்தி வைத்த வாகனம்… வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…மர்ம நபர்கள் கைவரிசை…!!

வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் ஒருங்கினைந்த கடல் உணவு பூங்கா வளாகம் இருந்து வருகின்றது. தற்போது பூங்காவில் கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வசித்து வரும் சரவணன் என்ற இளைஞன் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் வேலையை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் அவரது அறைக்கு தூங்குவதற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து இருசக்கர வாகனத்தை அறையில் வெளியே நிறுத்தி வைத்திருந்துள்ளார். இதனைதொடர்ந்து மறுநாள் காலையில் எழுந்தது பார்த்த போது வெளியே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தையும் அறையில் இருந்த அவரது நண்பரின் செல்போனும் திருடு போயிருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சரவணன் உடனடியக கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |