வார சந்தையில் ஆடுகளை விற்பனை செய்ய வந்த விவசாயிகள் கவலையுடன் திருப்பி எடுத்து சென்றுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று ஆடுகளின் சந்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வாரமும் பல பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் தங்களின் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.இதனை வெளியூர் மற்றும் உள்ளூரில் வசிக்கும் இறைச்சி வியாபாரிகள் நேரில் வந்த ஆடுகளை விலைக்கு வாங்கி செல்கின்றனர். இதனையடுத்து வாரச் சந்தைக்கு அதிகமான ஆடுகளை விற்பனைக்காக விற்பனையாளர்கள் கொண்டு வந்துள்ளனர்.
ஆனால் புரட்டாசி மாதம் தொடங்கிய காரணத்தினால் வியாபாரிகள் ஆடுகளின் விலை குறைவாக நிர்ணயம் செய்துள்ளனர். இதனால் அதிகமான ஆடுகள் விற்பனை ஆகாமல் திரும்பி கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவற்றில் பல கஷ்டத்தில் இருக்கும் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த ஆடுகள் குறைந்த விலைக்கு விற்பனை ஆனதால் கவலையுடன் திரும்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக கால்நடை வளர்க்கும் ஒரு விவசாயி கூறும் போது, புரட்டாசி மாதம் இந்துக்கள் அதிகமானோர் அசைவம் சாப்பிட விரும்ப மாட்டார்கள். எனவே வியாபாரிகள் ஆடுகளின் விலையை குறைத்து வாங்கி சென்று இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.