கர்ப்பிணியாக இருக்கும் அரசு ஊழியர் பேறுகால விடுப்பு எடுத்துச் சென்றால் அவர்களுக்கு வீட்டு வாடகைப் படி வழங்கப்படாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு வேலை செய்யும் தாய்மார்கள் தங்களுடைய பச்சிளம் குழந்தைகளை பராமரித்து கொள்வதற்காக அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது. 9 மாதங்களாக இருந்த இந்த பேறுகால விடுப்பானது தற்போது 12 மாதங்களாக உயர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில், கர்ப்பிணியாக இருக்கும் அரசு ஊழியர் பேறுகால விடுப்பு எடுத்துச் சென்றால் அவர்களுக்கு வீட்டு வாடகைப் படி வழங்கப்படாது என்று அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.