Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 To 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு… முதல்வர் ஸ்டாலின்…..!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்த நிலையில் முதற்கட்டமாக கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9-12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட மூன்று வாரங்களில் கொரோனா பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு விரைவில் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் சேர்ப்பது குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.இதனால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிகவேகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |