Categories
மாநில செய்திகள்

BREAKING : உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும்… சிசிடிவி கேமராக்கள் வைக்க வேண்டும்… மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்!!

உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறுகிறது.. தேர்தலுக்கான பணிகளில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். வேட்புமனு தாக்கலும் இன்றுடன் முடிவடைகிறது.. இதற்கிடையே மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது..

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு 9 மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவர் வாக்குப்பதிவு அலுவலர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |