பேராசிரியர் வீட்டில் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வீசி தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நியூட்டன் பேராசிரியர் நகர் பகுதியில் அப்துல் வஹாப் என்பவர் வசித்து வருகிறார். இவர் இஸ்லாமிய கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 35 பவுன் தங்க நகைகள், விலை மதிப்புடைய மடிக்கணினி மற்றும் 3 லட்சம் ரொக்கப் பணம் காணாமல் போயிருந்தது அவருக்கு தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அப்துல் வாஹாப் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று கைரேகை நிபுணர்களுடன் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.