தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாகப்பட்டினம் மீனவ பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் கடல் அரிப்பை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகப்பட்டினம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் சில நாட்களாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடல் நீர் சுமார் 100 மீட்டர் தூரம் ஊருக்குள் புகுந்து விடுவதாக தகவல்கள் வந்துள்ளது. இதனால் சுமார் வீடுகள், பல மின்கம்பங்கள் என சேதமடைந்து விழுந்துவிட்டது.
கடல் கொந்தளிப்பு அதிகமாக இருப்பதன் காரணமாக கடல் நீர் உட்புகுந்து பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் நாகப்பட்டினம் பகுதிக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. எனவே திமுக அரசு நாகப்பட்டின பகுதியில் இருக்கும் நம்பியார் நகர் மீனவ கிராமங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் போர்கால அடிப்படையில் கடல் அரிப்பை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.