Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேன் கண்ணாடி உடைப்பு…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த போலீஸ்….!!

வேன் கண்ணாடியை உடைத்தது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணப்படை வீடு பகுதியில் இருதயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலு என்ற மகன் உள்ளார். இவருக்கும் கீழநத்தம் மேலூர் பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மூர்த்தி கீழநத்தம் பகுதியில் வசிக்கும் நாராயணன் உள்ளிட்ட சிலருடன் இருதயராஜின் வீட்டிற்கு சென்று அவருக்கு சொந்தமான வேனின் கண்ணாடியை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதனை இருதயராஜ் தட்டிக் கேட்டுள்ளார். இதற்கு மூர்த்தி இருதயராஜை அவதூறாக பேசி அரிவாளால் வெட்ட முயன்று கொலை மிரட்டல் விடுத்து விட்டு அனைவரும் அங்கிருந்து சென்றுள்ளனர்.  இதனால் காயமடைந்த இருதயராஜ் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூர்த்தி, நாராயணன் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் மற்ற சிலரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |