Categories
உலக செய்திகள்

மீண்டும் தொடங்கிய விமான சேவை…. புதிய வழிமுறைகளுடன் ஆரம்பம்…. கனடா அரசு அறிவிப்பு…!!

கொரோனா 2ஆம் அலையால் நிறுத்தப்பட்ட விமான சேவைகள் புதிய வழிமுறைகளுடன் செப்டம்பர் 21 முதல் கனடா அரசு தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் 2ஆம் அலை காரணமாக இந்தியாவுடனான நேரடி விமான சேவையை கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் கனடா அரசு நிறுத்தியது. இந்நிலையில் ஏர் கனடா மற்றும் ரொறன்ரோ-டெல்லி இடையேயான விமான சேவையை புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி மீண்டும் செப்டம்பர் 21 முதல் கனடா அரசு தொடங்கியுள்ளது.

இதன் மூலம் ஏர் கனடாவின் அறிக்கையில், தடுப்பூசி செலுத்திய நபர்கள் RT-PCR மற்றும் PCR ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றால் பரிசோதிக்கப்பட்டால் மட்டுமே விமானத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் இந்திய மருத்துவ சான்றிதழ்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் கூறியுள்ளது. இந்த முறை அனைத்து பயணிகளுக்கும் பொருந்தும் என்றும் குறிப்பாக 14 முதல் 180 நாட்களுக்கு முன் பெறப்பட்ட PCR சான்றிதள்களுக்கு அனுமதி பெற இயலாது என கூறியுள்ளது.

Categories

Tech |