பூ வியாபாரிகள் குறித்து நடிகர் விஜய் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதால், பிகில் படத்தை புறக்கணிக்கப்போவதாக பூ வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்ப்ர 19 – ஆம் தேதி சென்னையில் கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய், பூ வியாபாரம் செய்பவரை வெடி வியாபாரம் செய்ய வைத்தால் அவர்கள் அதில் தண்ணீர் தெளிப்பார்கள் என்றும் எந்த தொழிலை யாரிடம் ஒப்படைக்க வேண்டுமோ அந்த செயலை அவரிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று பூ வியாபாரிகளை மட்டம் தட்டி பேசினார்.இதனால் பூ வியாபாரிகள் பெரிதும் அதிருப்தியடைந்தனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அண்ணா புஷ்ப தொழிலாளர் சங்க செயலாளர் படையப்பா ரங்கராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, பூ வியாபாரிகளை இழிவாக பேசியது தவறு என்றும் நடிகர் விஜய் மைக் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவரா என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், விஜய் தனது கருத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் இல்லையென்றால் மாவட்டம்தோறும் பிகில் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.