Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நிர்வாகி கொலை வழக்கு…. பிடிபட்ட குற்றவாளி…. நீதிபதி உத்தரவு….!!

கட்சி நிர்வாகி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலரான வசீம் அக்ரம் கடந்த 10-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தி உள்ளனர். அதன்பின் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனை அடுத்து அவரை சேலம் மத்திய சிறைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் டீல் இம்தியாஸை ஏழு நாட்கள் காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பாக மனு அளித்துள்ளனர். இவற்றில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இம்தியாஸ் என்பவரால் எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்காக காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் கோர்ட் வளாகம் முழுவதுமாக தடுப்புகள் அமைத்து 100-க்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

Categories

Tech |